அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா! பிக்பாஸை நிகழ்ச்சியை கேவலமாக பேசிய லட்சுமி மேனன்.

 பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக திட்டி தீர்த்த நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இந்நிலையில், அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதில் ஒன்றை பதிவிட்டார் அது தற்பொழுது அணைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது, அவர் கூறியதாவது:

“நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை. மேலும் மற்றவர்கள் சாப்பிட்ட பிளேட்டுகளையும், அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளையும் நான் இப்போது மட்டுமல்ல, எப்போதுமே சுத்தம் செய்ய மாட்டேன் எனக்கு அது அவசியமும் இல்லை. நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன் சண்டை போடவும் தயாராக இல்லை. இனி பிக் பாஸ் போன்று ஏதோ ஒரு கேவலமான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதாக வதந்திகளுடன் யாரும் என்னிடம் வரமாட்டாங்கனு நம்புகிறேன்”.

என லட்சுமி மேனன் பதிவிட்டுருந்தார்.

அவரின் இந்த கோவமான பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், அவரை விமர்ச்சிக்கவும் செய்தனர். சாப்பிட்ட பிளேட்டுகள், மற்றும் கழிப்பறையை கழுவுவது கேவலமான விஷயமா என்று கேள்வி எழுப்பி, அவரைப் கடுமையாக சாடி வருகின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி லட்சுமி மேனன் வீடியோ ஒன்றை  பதிவிட்டுருந்தார். அதில் அவர் கூறியதாவது:

” சற்று நேரத்திற்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நான் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்த பல பேர் எனக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்கள். அதில் பலர் கூறியதாவது  உனக்கு பிளேட்டு கழுவுவது, கழிப்பறைகளைக் கழுவுவது கேவலமா இருக்கா என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தனர்”.

என்னை கேள்வி கேட்க நீங்கள் யார்? அவை அனைத்தும் என்னுடைய விருப்பம் தான். பிக்பாஸ் நிகழ்ச்சி சிலருக்கு  பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம்.

அதே போல் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் நான் அங்கு கலந்துகொள்ளவில்லை. எங்கள் வீட்டில் நான் உபயோகிக்கிற பிளேட்டுகள் மற்றும் கழிப்பறைகளை நான் தான் சுத்தம் செய்கிறேன். ஒரு நிகழ்ச்சிக்குப் போய் அதைச் செய்ய எனக்கு பிடிக்கவில்லை.

கேமரா முன்பு மற்றவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு, சாப்பிட்ட பிளேட்டுகள் மற்றும்  கழிப்பறைகளைக் கழுவுவது எல்லாம் எனக்கு தேவை இல்லாத ஒன்று. என்னிடம் பிக் பாஸ் சீசன் 4க்கு போறீங்களானு கேட்கும்போது எனக்கு கஷ்டமா இருக்கு.

மற்றவர்களின் விருப்பத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்”. என்று லட்சுமி மேனன் கூறிஇருந்தார்.

Related posts

Leave a Comment