நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் தமிழ் ரசிகரகளிடையே பிரபலம் ஆனார்.

மேலும் அதை தொடர்ந்து தற்பொழுது இவர் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வரும் கார்த்தியுடன் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்றல் அது மிகையாகாது.
சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ராஷ்மிக்க மந்தனா மிகமும் முக்கியமானவர். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு தனது ரசிகர்களை எப்போதும் கவர்ந்து வருகிறார். அதோடு ரசிகர்கள் கேள்வி கேட்கும் கேள்விக்கும் பதில் தெரிவித்து வருகிறார்.
அப்படி பதில் அளித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் இவர் கோவா வில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கும் போது அங்கு இருக்கும் தலகாணி உரை மிகவும் அழகாக இருந்ததால் அதனை அங்கிருந்து திருடி கொண்டு வந்ததாக வெளிப்படையாக கூறியிருந்தார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வந்ததுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது கொரோன லாக் டவுனில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இவர் சுற்றுலாவிற்காக கோவாவிற்கு சென்றுள்ளார். சுற்றுலாவிற்கு சென்ற ராஷமிக்க அங்கு இயற்கை அழகை ரசித்தது மட்டும் இல்லாமல் பீச்சில் உடற்பயிற்சியும் செய்து வந்துள்ளார். தற்போது அந்த உடற்பயிற்சி வீடியோவை தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இவர் ஆண்களுக்கு நிகராக ஒர்க்கவுட் செய்யும் காட்சி அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது.
முதன் முதலாக தான் இப்போதுதான் பீச்சில் உடற்பயிற்சி செய்வதாகவும் அலைகளின் சத்தமும் கடல் காற்றின் வாசனையும் சூரியனின் அஸ்தமனத்தை பார்ப்பதும் கடல் மணலில் தன்னுடைய கால் பதிவதும் ரொம்பவே அழகா இருக்கு என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.