உச்சக்கட்ட விறுவிறுப்புடன் காத்திருக்கும் தளபதி விஜயின் ரசிகர்கள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கி தளபதி விஜயின் ரசிகர்களால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் தான் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தினை ரிலீஸ் செய்ய காலதாமதமானாலும் கூட தியேட்டரில் மட்டுமே தான் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தெள்ள தெளிவாக கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் மாஸ்டர் படத்தில் அனிருத்தின் ‘குயிட் பண்ணுடா’ என்ற லிரிக்ஸ் பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது, இது ரசிகர்களால் மிகவும் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் இத்தருணத்தில் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அம்மணி ஆன்ட்ரியா, படத்தினை பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நான் நடித்து இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் 2021 ம் ஆண்டில் மிக பெரிய சாதனை படைக்கும் படமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை
மஸ்டெர்ல் தளபதி விஜயுடன் நடித்துள்ளது எனக்கு மறக்க முடியாத அனுபவம். குறிப்பாக மாஸ்டர் படத்திற்குப் பிறகு நானும் தளபதி விஜயின் ரசிகை ஆகிவிட்டேன். அந்த அளவுக்கு மிகவும் நல்ல மனுஷன்” என்று நெகிழ்ச்சியுடன் ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறியதால், ஏற்கனவே தளபதி விஜயின் ரசிகர்கள் மாஸ்டர் படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்று விழி மேல் விழி வைத்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்னும் வெறி ஏற்றி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.