The talk of the town movie ” PARASITE” board me and I slept off in middle of the movie!
பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி சமீபத்தில் ஆஸ்கார் விருது வாங்கிய பாராசைட் (Parasite) படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தினை வெளிப்படுத்தினர். அதில் அவருக்கு படம் பிடிக்காமல் பாதியிலே தூங்கி விட்டதாகவும், மேலும் பாதி படத்திற்க்கு மேலே பார்க்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட பாராசைட் படம் எனக்கு போர் (bore) அடிக்கிற திரைப்படம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் ஆஹா ஓஹோ என புகழப்படும் நம் ராஜமௌலியின் ரசனையே இப்படி இருக்கிறதென்றால் இவர் தெலுங்கு சினிமாவினை உலக சினிமா அளவிற்க்கு உயர்த்துவார் என சொல்லி கொண்டிருக்கும் கூட்டத்தை நாம் எப்படி திருத்துவது. வாய்ப்பில்லை ராஜா!
திடீர் ராஜ மௌலி ரசிகர்கள் யாருமே கோவப்பட வேண்டாம். நான் அவர் கூறியதை தான் சொன்னேன்.
தமிழ் சினிமாவை தெலுங்கு சினிமாவுடன் ஒப்பிட்டு பார்த்தால் அவர்கள் தமிழ் சினிமாவைவிட 20 வருடங்கள் பின்னாடி உள்ளார்கள் என்பதுதான் உண்மை.
மேலும் இதில் தொழில்நுட்பம், பட்ஜெட், நடிப்பு அது இது என்று தனி தனியாக பிரித்து சொல்வதற்கு ஏதுமில்லை.
ரொம்ப சிம்பிலா சொல்லனும்னா இன்னைக்கும் தெலுங்கில் நெகட்டிவ் கிளைமாக்ஸ் இருந்தால் படம் ஓடாது தயாரிப்பாளர் நஷ்டம் தான் அடைவார்.
Spread the love