மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்த போது இவருக்கு அதிகம் ஜோடியாக தொடர்ந்து பல படங்களில் காயத்ரி நடித்தார்.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மெகா ஹிட் அடித்த படமான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் காயத்ரி திருமண மேடையில் மேக்கப்போடு இருக்கும்போது அவரை பார்த்து, ப்ப்ப்பா! யார் இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டிருக்கிறது என்று விஜய் சேதுபதி கூறுவார்.
இன்றுவரை அந்த ஒரு டயலாக் அனைத்து இளைஞர்களிடமும் பெருமளவு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பின் இனிமேல் சினிமாவில் மேக்கப்பே போடுவது இல்லை என முடிவு செய்துவிட்டாராம் காயத்ரி.
விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி ஆகியோர் இணைந்து 6 படங்களில் நடித்துவிட்டனர் அதில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற படங்கள் என்றல் அது நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், ரம்மி, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ்.
விஜய் சேதுபதிக்கு மிகவும் பொருத்தமான நாயகிகளில் காயத்ரிக்கு பெரிய அளவு பங்கு உண்டு. அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து பல படங்களில் வரிசையாக அவருடன் நடிக்க கமிட்டாகி வருகிறார்.
இந்நிலையில் தனது சிறுவயதில் குழந்தை பருவத்தில் உடை ஏதும் அணியாமல் இருக்கும் குழந்தை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.