எனக்கு இதுவரை 4 முறை திருமணம் நடந்துள்ளது – கடுப்பாகிய நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சசுரேஷுக்கு திருமணம் என்கிற தகவல்கள் பல முறை இதுவரை இணையதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.

 

keerthi-suresh-married-4-times-so-far

 

 

ஆம் இசையமைப்பாளர் அனிருத்துடன் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்றும் பிரபல கேரளா தொழிலதிபர் ஒருவருடன் திருணம் என்றும் இது போல  பல தடவை தகவல் பரவியுள்ளது.

 

ஆனால் கீர்த்தி சுரேஷ் இதுவரை தனது திருமணம் குறித்து கிசுகிசுக்கப்படும் ஒவ்வொரு செய்தியையும், மறுத்து வந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

 

இந்நிலையில் சமீபத்தில் தனது திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார். இதில் அவர் கூறியதாவது ” எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றது. சில இணைய தளங்களில் நான் திருமணம் செய்து கொடுத்துள்ளதாக 3, 4 தடவை செய்திகள் பரவியுள்ளன “.

 

” ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நபர்களுடன் திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்ள இன்னும் வெகு காலம் இருக்கிறது ” என்று கூறியுள்ளார்.

Spread the love

Related posts