ஐந்து மொழிகளில் வெளியாகும் அண்ணாச்சி படம்!

அண்ணாச்சி

அண்ணாச்சி – சரவணா ஸ்டொர்ஸ் தி லெஜெண்ட் சரவணன் நடிக்கும் திரைப்படம் ஐந்து வெவ்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.

அண்ணாச்சி
அண்ணாச்சி

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி திரு அருள்சரவணனுக்கு திடிர்னு ஹீரோ ஆசை ஏற்படவே தனது நிறுவன விளம்பரங்களில் தானே நடிக்க ஆரம்பித்தார் தி லெஜெண்ட் அருள் சரவணன். இதை பார்த்த பலரும் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஆனாலும் அதை எல்லாம் சிறிதும் கண்டுகொள்ளாமல் எல்லா விளம்பரங்களிலும் அவரே நடித்தார். இதையடுத்து தன்னை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றும் முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அந்த படத்தினை அவரை வைத்து விளம்பரப் படங்களை இயக்கிய இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கி வருகின்றனர். இசைக்கு ஹேரிஸ் ஜெயராஜ் மற்றும் பாடலுக்கு வைரமுத்து என முன்னணிக் கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் தி லெஜெண்ட் சரவணன்.

படத்தில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் திரு விவேக் சமீபத்தில் இறந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடந்து வரும் நிலையில் படத்தை ஐந்து வெவேறு மொழிகளில் ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை அந்த படத்தின் நாயகியே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Spread the love

Related posts