Contents
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ள க/பெ. ரணசிங்கம் படம் அக்டோபர் 16 ம் நாள் அன்று திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் – க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
க/பெ. ரணசிங்கம் படம் ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த அக்டோபர் 2 முதல் வெளியாகியுள்ளது. ரூ. 199 செலுத்தி க/பெ. ரணசிங்கம் படத்தினை ஜீ5 ஓடிடி தளத்தில் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் க/பெ. ரணசிங்கம் படம் அக்டோபர் 16 அன்று திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இது பற்றி இப்படத்தினை தயாரித்த கேஜேஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவித்துள்ளதாவது:
உங்களுக்கு அருகில் உள்ள திரையரங்குகளில் – இதைச் சொல்ல நாங்கள் எவ்வளவு நாட்கள் காத்திருந்தோம். எங்கள் அனைவருக்குமே இது ஒரு உணர்வுபூர்வமான தருணம். உங்கள் அனைவருக்கும் திரையரங்கு அனுபவத்தைத் தர நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம். க/பெ ரணசிங்கம் படத்தை அக்டோபர் 16 முதல் திரையரங்குகளில் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
திரையரங்குகள் அனைத்தும் வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், ஒவ்வொருவரும் இருக்கையில் ஒரு இடம் விட்டு அமரும் வகையிலும் 50 சதவீத பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற வகையிலும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறியுள்ளார்.
Production: KJR Studios
Cast: Aishwarya Rajesh, Bhavani Sre, Vijay Sethupathi
Direction: P Virumandi | Screenplay: P Virumandi | Music: Ghibran | Distribution: Zee Studios
Spread the love