சூரரைப்போற்று ரிலீஸ் தேதி எப்போது ? Sooraraipotru Release Date !

 ‘சூரரைப்போற்று’- படத்திற்கு தடையில்லா சான்று வழங்கிய விமானப்படை.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்திற்கு தடையில்லா சான்று கிடைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தை வருகிற அக்டோபர் 30ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். மேலும் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகர் சூர்யா, திரைபடம் விமானப் போக்குவரத்து சம்பந்தமான கதைக்களத்தை கொண்டு படமாக்கப்பட்டது. 
 
மேலும் இந்திய விமானப்படையானது  நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது என்பதால், அவர்களிடம் பல அனுமதிகளை பெற வேண்டி உள்ளது. மேலும் சில என்.ஓ.சி. எனப்படும் அரசின் தடையில்லா சான்றிதழ்களுக்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30-ந் தேதி வெளியாகாது என கூறி இருந்தார்.
 
இதற்கிடையில், படத்திற்கு விமானப்படை தரப்பில் இருந்து NOC எனப்படும் தடையில்லா சான்றிதழ் கிடைத்துவிட்டதாக 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் கூறியுள்ளார். புதிய ரிலீஸ் தேதி மற்றும் படத்தினை பற்றிய முக்கிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். 
 
சூரரைப்போற்று படத்தினை தீபாவளி பண்டிகையன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதேபோல் நடிகை நயன் தாராவின் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படமும் தீபாவளியன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

Loading

Spread the love

Related posts