தயாராக இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 வீடு ! ஆர்வத்தில் ரசிகர்கள்

Big Boss

 கமலஹாசன் தொகுத்து வழங்கிய கடந்த 3 பிக் பாஸ் சீசன்களின் வெற்றியினைத் தொடர்ந்து நாளை முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது மேலும் இந்த நிகழிச்சியின் முன்னோட்டம் இன்று ஆரம்பமாக உள்ளது.

இதில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என பேசப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றி, விஜய் டிவி தரப்பில் இருந்து ரகசியம் காத்து வருவதால், தினம் தோறும் பல தகவல்கள் கசிந்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்துதலின் காரணமாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்களுக்கு 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டு பரிசோதனை செய்து பின்னரே பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட உள்ளார்கள்.

சென்ற 3 சீசன்களிலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களில் அகம் டிவி வழியாக போட்டியாளர்களை சந்திப்பார் கமல்ஹாசன். அப்போது ஒரு சில பார்வையாளர்களுக்கு மட்டும் நிகழ்ச்சியை நேரில் பார்க்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால் பார்வையாளர்களை படப்பிடிப்பு அரங்குக்குள் அனுமதிக்க வாய்ப்பே இல்லை என்று பரவலாக பேசப்படுகிறது. அவ்வாறு நடந்தால் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர்கள் பற்றிய  தகவல்கள் வெளியே கசிய வாய்ப்பே இல்லை என்று நம்ப படுகிறது.

இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம் மற்றும் கொண்டாட்டத்துடன் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறார்கள். பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் அவர்களுடன் பிரச்னைகளும் சேர்ந்து கொள்ளும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த முறை கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் யார் என்பதை வைத்தே நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்குமா அல்லது இல்லையா என்பதை பார்வையாளர்கள் தீர்மானித்துவிடுவார்கள்.

 பிக்பாஸ் சீசன் 4 வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. போட்டியாளரிகளுக்கான லிவ்விங் ரூம், டைனிங் ஹால், கழிவறை வசதி, படுக்கை அறை, தோட்டம் மற்றும் கிச்சன் என அட்டகாசமாக உள்ளது பிக்பாஸ் சீசன் 4 வீடு.

ஒவ்வொரு முறையும் வெளியில் பொருத்தப்பட்டிருக்கும் அகம் டிவி வாயிலாக உள்ளே நடப்பதை கமல் ஹாசன் காண்பார். அதை அரங்கில் இருக்கும் ரசிகர்களுக்கும் தெரிவிப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த முறை எந்த மாதிரி சர்ப்ரைஸுடன் பிக்பாஸ் நடைபெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்த்து ரசிப்போம்.

அடுத்து வரும் 105 நாட்களுக்கு மக்கள் பிக்பாஸ் வீட்டில் ஒருவராக இருப்பார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தொடர்ந்து வெளியாகும் ப்ரோமக்கள் தான் போட்டியின் சுவாரஸ்யத்தை எடுத்துக்கூறும். மேலும் நிகழ்ச்சியின் துவக்கத்தில் கமல் ஹாசனின் ஆடல், பாடல் ஏதாவது இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பிக் பாஸ் பிரியர்கள்.

Loading

Spread the love

Related posts