இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.

இதன்பின் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மற்றும் சேட்டை போன்ற பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் நடிகை அஞ்சலி.
சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஏற்கனவே வதந்திகள் பரவி வந்துள்ளது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில், நடிகை அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க போவதாகவும் புதிய தகவல்கள் தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து நடிகை அஞ்சலி தரப்பில் இருந்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.