நவரச தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள ஒரு அந்தாலஜி திரைப்படம். இப்படம் தமிழ் திரைப்பட பிரபல முன்னணி இயக்குனரான மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு ஆன்லைன் OTT தலமான நெட்பிலிக்ஸ்(Netflix) மூலம் நேரடியாக வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். நவரசம் எனப்படும் 9 வகை உணர்வுகளான கருணை, நகைச்சுவை, ஆச்சர்யம், கோபம், அமைதி, தைரியம், பயம், அருவருப்பு, மற்றும் சிங்காரம் (காதல்) ஆகிய உணர்ச்சிகளை மையமாக கொண்டு ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒவ்வொரு பாகம் என்று மொத்தம் ஒன்பது பாகங்கள் இத்திரைப்படத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
நவரச திரைப்படம் ஒரு அந்தாலஜி திரைப்படமாக நெட்பிலிக்ஸ் எனும் ஆன்லைன் ஓடிடி நிறுவனம் மூலம் 2021 ஆகஸ்ட் 9ல் வெளியாகிறது. இப்படத்தின் தயாரிப்பாளரான மணி ரத்னம் “இப்படத்திற்காக நெட்பிலிக்ஸ் நிறுவனம் தரக்கூடிய பணத்தை நேரடியாக பெப்சி ஊழியர்களுக்கு தரப்படும்” என்று கூறியுள்ளார்.
நவரச திரைப்படத்தின் கதை மற்றும் பிரத்யேக தகவல்கள் கீழே
1. இன்மை (பயம்)
இயக்குனர் ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ள இந்த பகமானது பயம் உணர்வை குறிக்கிறது. இதில் சித்தார்த் மற்றும் பார்வதி நடித்துள்ளனர்.
2. ரௌத்திரம் (கோபம்)
தமிழ் சினிமாவில் நடிகராக புகழ் பெற்று வந்து அரவிந்த் சுவாமி இயக்குனராக இந்த பாகத்தில் உருவெடுத்துள்ளார். இதில் ரித்விகா, ஸ்ரீராம் மற்றும் ரமேஷ் திலக் நடித்துள்ளனர். கோபம் என்னும் உணர்ச்சியின் அடிப்படையில் இந்த பாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
3. எதிரி (கருணை)
இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கியுள்ள இந்த பாகத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பாகம் கருணை அடிப்படையில் எடுக்க பட்டுள்ளது.
4. கிட்டார் கம்பி மேலே நின்று (சிங்காரம் (காதல்))
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ள இந்த பாகம் காதல் உணர்வை குறிக்கிறது. இந்த பாகத்தில் நடிகர் சூர்யா மற்றும், ப்ரயாகா ரோஸ் மார்ட்டின் நடித்துள்ளனர்.
5. துணிந்த பின் (தைரியம்)
இயக்குனர் சார்ஜுன் இயக்கியுள்ள இந்த பாகத்தில் அதர்வா, அஞ்சலி, மற்றும் கிஷோர் நடித்துள்ளனர். இந்த பாகம் தைரிய உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
6. சம்மர் ஆப் 92 (ஹாஸ்யம் (நகைச்சுவை))
இயக்குனர் பிரியதர்சன் இயக்கியுள்ள இந்த பாகத்தில் யோகி பாபு, ரம்யா நம்பீசன் மற்றும் நெடுமுடி வேணு நடித்துள்ளார்கள். இந்த பாகம் ஹாஸ்யம் என்னும் நகைச்சுவை உணர்வை மையமாக வைத்து எடுத்துள்ளனர்.
7. ப்ராஜெக்ட் அக்னி (ஆச்சர்யம்)
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த பாகத்தில் பிரசன்னா, அரவிந்த் சுவாமி மற்றும் பூர்ணா நடித்துள்ளார்கள். இந்த பாகம் ஆச்சர்யம் என்னும் உணர்ச்சியை குறிக்கிறது.
8. பீஸ் (அமைதி)
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த பாகம் அமைதி என்னும் உணர்வை குறிக்கிறது. இதில் கவுதம் மேனன், பாபி சிம்ஹா மற்றும் சனத் நடித்துள்ளனர்.
9. பாயசம் (அருவருப்பு)
இயக்குனர் வசந்த் சாய் இயக்கியுள்ள இந்த பாகம் அருவருப்பு உணர்வை குறிக்கிறது. இதில் டெல்லி கணேஷ், ரோகினி மற்றும் அதிதி பாலன் நடித்துள்ளனர்.