பிக் பாஸ் வீட்டிற்குள் போவதற்கு முன் ஒரு குத்தாட்டம் போட்டு சென்ற ஷிவானி நாராயணன் – Shivani Narayanan

Shivani

 பிரபல விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் இந்த ஷிவானி நாராயணன், மேலும் இந்த சீரியல் மூலம் தான் இவர் தொலைக்காட்சியில் அறிமுகமானார் இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி சீசன் 3 இல் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்தது இவருக்கு மேலும் புகழை தந்துள்ளது.

வெறும் 19 வயதே ஆன ஷிவானி நாராயணன் இளம் வயதிலேயே நடிக்க வந்ததால் பட்டாம்பூச்சி போல் படபடவென புகழின் உச்சத்திற்கே சென்றுள்ளார், தற்பொழுது உள்ள இளசுகளின் மத்தியில் ஷிவானி நாராயணன் மிகவும் பிரபலமாகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஷிவானி நாராயணன் தற்பொழுது கடைக்குட்டி சிங்கம் மற்றும் இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார், அதேபோல் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் சீரியலகளில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் தான் வெளியிடும் புகைப்படம் மற்றும் விடீயோக்கள் கவர்ச்சிகரமாக இருக்கட்டும் என புஹைபடங்களையும் விடீயோக்களையும் அள்ளி வீசி வருகிறார்.

ஒரு பக்கம் கவர்ச்சி காட்டினாலும் கூட மறுபக்கம் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, அதிலும் ஒரு சில ரசிகர்கள் ஷிவானி நாராயணன் புகைப்படத்தை பார்த்து விமர்சிக்கவும் செய்துள்ளார்கள், இந்த நிலையில் ஷிவானி நாராயணன் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ளார், இவர் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட பொழுது பாடலுக்கு நடனமாடி அரங்கையே அதிர வைத்துள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பொழுது தனது சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராம்இல்  சூரரைப்போற்று படத்தில் மிகவும் பிரபலமடைந்த பாடலான காட்டுப் பயலே பாடலுக்கு தாவணி பாவாடையில் தலுக்கு மொழுக்குன்னு இடுப்பை ஆட்டி நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

Kaatu Payale ❤️ Blouse @ethnikhouse 💙

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

Spread the love

Related posts