பிசாசு-2 திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது

பிசாசு-2

 மிஷ்கின் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள பிசாசு-2 படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது .

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014 -ம் ஆண்டில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய விறுவிறுப்பான பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பினை  தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த பத்தினையும் இயக்குனர் நடிகர் –  மிஷ்கினே இயக்குகிறார். முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார் மற்றும் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் சக்கை போடு போட்ட  ‘சைகோ’ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி, பிசாசு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படத்தை பற்றி இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது: “பிசாசு-2, முழுக்க முழுக்க பேய் கதையாக உருவாகிக்கொண்டுள்ளது. இது, மற்ற படங்களில் வரும்  சிரிப்பு பேய் அல்ல. ஆக்ரோசமான பேய்யாக இருக்கும். முதல் பாகம் தொடர்பான சில காட்சிகழும் இதில் அமைந்திருக்கும். முதல் பாகத்தை விட, நூறு மடங்கு அதிகமாக திகில் காட்சிகள் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

படத்தில், மிக பயங்கரமான பயமுறுத்தல்களும், மிரட்டல்களும் இருக்கும் என்பதிலும் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ளார். ஒரு மலை கிராமத்தில் கதை சம்பவங்கள் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதால். முழு படப்பிடிப்பும் நீலகிரி மாவட்டம் மசனக்குடியில் நடைபெறும்.” என படத்தின் இயக்குனர் மிஸ்கின் கூறி உள்ளார்.

Related posts