பிரேமம் மலையாள படத்தில் சாய் பல்லவிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?- கசிந்த தகவல்

 மலையாளத்தில் தயாராகி மிகப்பெரிய ஹிட்டடித்த வெற்றி படங்களில் ஒன்று பிரேமம்.

இயக்குனர் ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படத்தில் நடிகர் நிவின் பாலி, நடிகை சாய் பல்லவி, அனுபமா, மடோனா செபாஸ்டின் என பலர் நடித்திருந்தனர். மலையாள படம் என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் தான் இந்த படத்திற்கு மிகபெரிய ரீச் கொடுத்தார்கள் என்று தான் சொல்லவேண்டும்.

Premam Review: How the 2015 Malayalam Film Affected Me - nair tejas dot com

சென்னையில் உள்ள அணைத்து திரையரங்குகளிலும் படம் பல மாதங்கள் ஓடி சாதனை படைத்தது.

இந்த படத்தின் மூலம் தான் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் நடிகை சாய் பல்லவி. ஆனால் தற்பொழுது கசிந்துள்ள தகவலின் படி அவர் நடித்த வேடத்தில் கதை எழுதும் போது இயக்குனர் தேர்வு செய்தது நடிகை அசினை தானாம்.

அப்போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற காரணத்தினால், நிவின் பாலியும் முயற்சி செய்ய அசினை பிடிக்க முடியவில்லை. அதன்பின்னரே சாய் பல்லவியை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர் படக்குழுவினர்.

இதனை அந்த படத்தின் இயக்குனர் ஆல்போன்ஸ் புத்திரனே ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்து விளக்கியுள்ளார்.

sai-pallavi-is-not-the-first-choice-for-malar-role

 

Spread the love

Related posts