மீண்டும் இயக்குநராகிறார் தனுஷ்.. எப்போது.? யார் முதல் சாய்ஸ் தெரியுமா.?

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். தற்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்திய அளவில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து கொண்டே தான் உள்ளது.

மீண்டும் இயக்குநராகிறார் தனுஷ்.. எப்போது.? யார் முதல் சாய்ஸ் தெரியுமா.?

 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற அதிரடியான படம் முடிந்த நிலையில் வெளிவர காத்துக்கொண்டு இருக்கிறது. Twitter Space-இல் கலந்துரையாடிய நடிகர் தனுஷ், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன என்று அந்த ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது” தனுஷ் 3 வருடம் கழித்து முழு நேர டைரக்டராக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே நடிகர் தனுஷ் ராஜ்கிரன் மற்றும் நடிகை ரேவதியை வைத்து பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதற்குப் பிறகு எடுத்த நான் ருத்திரன் என்ற படமானது பாதியிலேயே நின்று விட்டது. இதற்கிடையில் கிட்டத்தட்ட அடுத்த 3 ஆண்டுகளுக்கு தனுஷ் படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது திட்டவட்டமாகத் தெரிந்துள்ளது.

அதேபோல் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கண்டிப்பாக ஒரு படமாவது இயக்குவேன் என்றும் அவர் தான் என் முதல் சாய்ஸ் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார். நடிப்பு மற்றும் இயக்கத்திலும் கொடிகட்டி பறக்க வேண்டும் என்பது அவரின் முக்கிய ஆசையாக தெரிகிறது.

மீண்டும் இயக்குநராகிறார் தனுஷ்.. எப்போது.? யார் முதல் சாய்ஸ் தெரியுமா.?

இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். மாரி செல்வராஜ், ராம், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் வெற்றி மாறன் போன்ற இளம் இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறேன் என்றும் இந்த திறமையான இயக்குனர்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்பதையும் ரசிகர்களிடையே தெரிவித்துள்ளார்.

 

Loading

Spread the love

Related posts