நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

ஹீரோயினாக மட்டுமல்லாமல் மிகவும் துணிச்சலாக முன்னணி நடிகர்களுக்கு இணையாக வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தற்போது நடிகை வரலட்சுமியின் கைவசமாக காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, உள்ளிட்ட தமிழ் படங்களும், லாகம் என்ற ஒரு கன்னட படமும் உள்ளது.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் தனது செல்ல நாய் குட்டியை தனது மகன் என்று குறிப்பிட்டு ரசிகர்களுக்கு அறிமுகம் படுத்தியுள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள இந்த டுவிட்டர் பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Introducing my son #guccivaralaxmi
Follow him on Instagram @guccivaraxmi pic.twitter.com/XKBZfdYg5A— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) May 30, 2021