ரைசா லிவிங்டுகெதரில் உள்ளாரா ?

ரைசா

லிவிங்டூகெதரில் இருந்திருக்கீங்களா என கேட்டதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் பதில் சொன்ன ரைசா!

ரைசா
ரைசா

பிரபல தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவிய தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ரைசா தற்பொழுது ரசிகர்ளின் கேள்விகளுக்கு லைவ் சாட்டில் பதிலளித்து வந்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் லிவிங்டூகெதரில் இருந்திருக்கீங்களா? என்று கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல், நான் ஒருவரை பல வருடம் காதலித்து ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என்றும்
நாங்கள் கடந்த 2016ல் பிரிந்துவிட்டோம் என்றும் கூலாக கூறினார். யார்..? யார் அந்த நபர்? ஏன் பிரிஞ்சுட்டீங்க? என ரசிகர்கள் ரைசாவை நச்சரித்து வந்துள்ளனர் .

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்துள்ளார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ்மெட் ஆன நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார் நடிகை ரைசா. அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிக வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்பொழுது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரைசா.

Spread the love

Related posts