Contents
வடிவேலுக்கு பதிலாக ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு- கலக்கலான பர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகிவிட்டது!

வைகைப்புயல் வடிவேலு அவர்கள் சீக்கிரமே ஒரு நல்ல கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்த்து பார்த்து ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம் என்று தான் கூற வேண்டும். காமெடி ரோல்களில் நடிப்பதை விட ஹீரோவாக சில பல ப்ரொஜெக்ட்டுகள் கமிட் ஆகியிருந்தார். இம்சை அரசன் பார்ட் 2 , பேய் மாமா என சென்று கொண்டிருந்தது லிஸ்ட். ஆனால் எதுவும் தொண்டங்கப்படவில்லை ஆகவில்லை.
இங்கிலீஷ்காரன், சார்லி சாப்ளின் இரண்டு பார்ட்கள், வியாபாரி, என்னம்மா கண்ணு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் சக்தி சிதம்பரம். தன் நக்கல், நய்யாண்டிக்கு பெயர் போனவர் இவர். இவர் இயக்கத்தில் தான் வடிவேலு ஹீரோவாக பேய் மாமா படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தில் யோகி பாபு கமிட் ஆகி நடித்தே முடித்துவிட்டாராம். நேற்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டார். கொரோனா பீதியில் மக்கள் இருக்க, கொரோனாவிற்கு மருந்தாக நாங்க வரோம் என்ற வசனம் போஸ்டர் ல் உள்ளது.
பேக் ட்ராப்பில் பார்த்தால் மாஸ்க் அணிந்து உள்ளனர் சில ஆவிகள். மேலும் சமீபத்தில் பிரபலமான ‘இந்தி தெரியாது போடா’ என்கிற ஹாஷ்டக வாசகத்தை உல்ட்டா செய்து ‘எனக்கு இந்தி, தமிழ், தெலுங்கு எதுவுமே தெரியாது போடா’ என்று உஷாராக போட்டுள்ளனர்.
இந்த போஸ்டரில் இடம் பெற்று உள்ள பேய் மாமா லோகோ கூட நம்ம ஜுராசிக் பார்க் படங்களில் இருந்து சுட்டது தான் என 90 ஸ் கிட்ஸ் அப்பட்டமாக கண்டு பிடித்துவிட்டார்கள்.
பாக்கியா சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் எல்லப்பன் இந்த படத்தினை தயாரிக்கிறார். ஒளிப்பதிவு பன்னீர் செல்வம் மற்றும் ராஜ் ஆர்யன் இசை மற்றும் ப்ரீத்தம் எடிட்டிங் மற்றும் வசனங்களை ராஜகோபால் எழுதியுள்ளார். போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து கொண்டு இருக்கும் இப்படம் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆனா OTT தளத்திற்கு செல்லுமா அல்லது திரை அரங்கிற்கு செல்லுமா என்பது கூடிய விரைவில் தெரியவரும்.
Spread the love