பிக் பாஸ் 5 ல் நடிகர் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ?

கமல், பிக் பாஸ் 5  அட்வான்ஸை வாங்கி செலவே பண்ணிட்டாராம்

பிக் பாஸ் 5 ல் நடிகர் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை நடிகர் ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தார்கள். தமிழில் ஒளிபரப்பாவது போலவே ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு என்று பல மொழிகளில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கூட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற வதந்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டோமோல்  நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்து வரும் பிக் பாஸ் சீசன் 5 எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தள்ளது. ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி என்டிமால் நிறுவனத்துடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். எனவே, இனி வரும் 6 சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும். ஒருவேளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலுக்கு பதிலாக வேறு யாரவது வரலாம் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில், இந்த சீசனையும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சீசனில் அவருக்கு 50 கோடி ரூபாய், சம்பளம் பேசப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகி ஒருவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கடந்த மார்ச் மாதமே பிக்பாஸ் 5  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கடந்த மார்ச் மதமே கமல்ஹாசன் அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகச் சொன்னார். அந்தத் தொகையை தேர்தலுக்கு முந்தைய தனது கட்சி செலவுகளுக்குக் கொடுத்தாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, பிக் பாஸ் எப்போது துவங்கும் என்று தெரியவில்லை என்றாலும் கூட இந்த சீசனுக்கு கமல் தான் தொகுப்பாளர் என்பது உறுதியாகி விட்டது.

Related posts