யாருக்கும் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்து கொண்டாரா `குக்கு வித் கோமாளி’ புகழ்?

 விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முக்கியமான சிலர் அழைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு சிலருக்கு விருந்து நடந்த இடத்துக்குச்சென்ற பிறகு தான் விஷயம் தெரிந்திருக்கிறது.

குக்கு வித் கோமாளி' புகழ்

‘சிரிப்புடா’, ‘குக்கு வித் கோமாளி’ உள்ளிட்ட விஜய் டீவியில் ஒளிபரப்பான ஹிட் ஷோக்கள் பலவற்றில் பங்கு கொண்டு பிரபலமானவர் தான் புகழ். அதிலும் புகழை ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இவரை ரொம்பவே பிரபலப்படுத்தியத்தியது என்று கூறலாம். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது ஏகப்பட்ட சினிமா பட வாய்ப்புகள் இவருக்கு வரிசை கட்டத்தொடங்கியிருக்கின்றன. அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழ்நிலையில் தான் தற்போது இவர் குறித்துக் கிளம்பியிருக்கும் ஒரு செய்தி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆமாம், சில தினங்களுக்கு முன் புகழ் யாரையோ ரகசியமாகத் திருமணம்செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். சில வார‌ங்களுக்கு முன் ரகசியமாக நடந்த இந்தத் திருமணத்தில் புகழின் மிகவும் நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்து சிலர் மட்டுமே கலந்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது.

இது காதல் திருமணம் என்றும் பொண்ணு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவங்க என்றும் கூறி வருகின்றனர். ஆரம்பத்துல இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் பிறகு ரெண்டு பேர் வீட்டுலயுமே சம்மதம் சொல்லிட்டாங்கனுதான் கேள்விப்பட்டோம். அதனால மேரேஜ் எல்லாருக்கும் தெரிஞ்சி நடக்கும்னுதான் நினைச்சோம். ஆனால், இப்ப திடீர்னு கல்யாணம் நடந்துட்டதா சொல்றாங்க எல்லாரும். அவசரமா, ரகசியமா நடந்ததுக்கு என்ன காரணம்னு யாருக்கும் தெரியலை. ஒருவேளை கோவிட் லோக்கடவுன் சூழலா இருக்கிறதால எளிமையாப் பண்ணினாரோ என்னவோ!” என்கின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அந்தப் பிரபல நடிகை, ஒரு விருந்து கொடுத்துள்ளார். அந்த விருந்தில் ஜோடியாகக் கலந்து கொண்டுள்ளார் நம் புகழ். இவ்விருந்துக்கு ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கியமான சிலரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலருக்கு விருந்து நடந்த இடத்துக்குச்சென்ற பிறகே இந்த விஷயம் தெரிந்திருக்கிறது. விருந்து முடிந்ததும், எல்லோரும் ஜோடியுடன் வந்திருந்த புகழை வாழ்த்தி அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட பின்னரே கிளம்பியிருக்கிறார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கல்யாணத் தகவல் பற்றி புகழிடமே கேட்டோம். ‘’பிரபலமாகிட்டாலே இந்த மாதிரி வதந்திகள்லாம்  பரவிடும் ப்ரோ. நானே எல்லா இடத்துலயும் சிங்கிள் சிங்கிள்னு சொல்லிட்டுவர்றது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். நீங்க சொல்றதை  கேட்கிறப்ப, எனக்குச் சிரிக்கவா இல்ல எப்படி ரியாக்ட் செய்யறதுனு தெரியலை’’ என்றார் புகழ்

Loading

Spread the love

Related posts