Drishyam 2 Full HD Movie Download in Tamilrockers and Review

Drishyam 2

திரிஷ்யம் 2

தனது மூத்த மகள் செய்த ஒரு கொலையை மறைத்து, தன் குடும்பத்தைக் காக்க உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டராக இருக்கும் நடிகர் மோகன்லால், போலீசிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே ‘திரிஷ்யம்’ படத்தின் கதை. முதல் பாகம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ‘திரிஷ்யம் 2’ கதை தொடங்குகிறது. முதல் பாகத்தில் சாதாரண கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்த மோகன்லால், இப்போது ஒரு தியேட்டர் உரிமையாளராக இருக்கிறார். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையைப் படமாகத் தயாரிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆறு ஆண்டுகளில் நடிகர் மோகன்லாலிடம் ஏற்பட்ட மாற்றங்களை மீனா விரும்பாமல் இருக்கிறார். இவர்களது மூத்த மகள் அன்ஸிபா, முன்பு நடந்த கொலை சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டுள்ளார்.
இந்த ஆறு ஆண்டுகளாக எந்த ஒரு பிரச்சினைகளும் இல்லாமல் நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்தாலும், மொத்தக் குடும்பமும் சிறிய பயத்துடனே இருந்து வருகிறார்கள். நடிகர் மோகன்லாலின் இந்த அபரிதமான வளர்ச்சியால் பொறாமையில் இருக்கும் சிலர் கொலையை அவர்தான் செய்ததாகவே நம்புகின்றனர். இந்நிலையில், மோகன்லாலை மீண்டும் சிக்கவைக்க காத்துக்கொண்டிருக்கும்  போலீசாருக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. இதனால் மீண்டும் சிக்கலில் மாட்டுகிறார் நடிகர் மோகன்லால்.
படத்தின் இறுதியில் போலீசிடம் மோகன்லால் மாட்டிக்கொண்டாரா? போலீஸ் விசாரணையை மோகன்லால் மற்றும் அவரது குடுபத்தினர் எப்படி எதிர்கொண்டனர்? இறுதியில் வென்றது யார்? என்பதே திரிஷ்யம் 2 படத்தின் மீதிக்கதை.
ஜார்ஜ்குட்டியாக வந்து தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார் நடிகர் மோகன்லால். பல காட்சிகளில் தன்னுடைய ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பினால் அதிகம் கவர்கிறார்.  மோகன்லாலின் மனைவி ராணியாக வரும் நடிகை மீனா, கணவனிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் விரும்பாமல் இருப்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் குற்ற உணர்ச்சியில் அழுது புலம்புவது, என நடிப்பில் பளிச்சிடுகிறார் மீனா. மகள்களாக அன்ஸிபா, எஸ்தர் அனில், அதிகாரியாக வரும் முரளி கோபி என அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள். முதல் பாகத்தில் அசத்தலாக நடித்த ஆஷா சரத் இதிலும் வந்து நடித்து அனைவரின் மனதில் நிற்கிறார்.
முதல் பக்கத்தில் உள்ள கிளைமாக்ஸ் காட்சியிலிருந்து ஒரே நூல் பிடித்து ஒரு முழுக் கதையினையும் வடிவமைத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்திலே நம்மைத் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு படம் முடியும் வரை நம்மை விட்டு நீங்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப். திரிஷ்யம் 2 படத்தில் மோகன்லால் கொலையை மறைக்க போராடுவது போல், இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த கதைக்காக மிகவும் போராடி உருவாக்கியுள்ளார். இந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். திரைக்கதையில் மாயாஜாலம் புகுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர். பொதுவாக முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி இரண்டாம் பாகத்திற்கு அதிகம் கிடைப்பதில்லை என்று ஒரு கூற்று பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால், இந்த பாகத்தை திறம்பட இயக்கிய ஜீத்து ஜோசப்புக்கு பாராட்டுகள் குவிகிறது.
இசையமைப்பாளர் அனில் ஜான்ஸனின் இசை படத்திற்கு பெரிய பலம். இவரது பின்னணி இசை மற்றொரு ஹீரோ என்று தான் கூற வேண்டும். கதைக்குத் தேவையானதை அழகாகவும்  நேர்த்தியாகவும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் குருப்.
மொத்தத்தில் ‘திரிஷ்யம் 2’ திகைப்பு.

Director: Jeethu Joseph
Producer: Antony Perumbavoor
Cinematography: Satheesh Kurup
Production company: Aashirvad Cinemas
Cast :  Mohanlal, Meena, Ansiba, Esther Anil

Full Movie Download : Drishyam 2

Loading

Spread the love

Related posts