எதற்கும் துணிந்தவன் – 5 கெட்டப்களில் சென்ஸிடிவ் பிரச்சனையில் இறங்கும் சூர்யா!
சூர்யா நடித்துள்ள இந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் பற்றிய கதை என சொல்லப்படுகிறது.
சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வரும் நிலையில். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன் தினம் விளியிடப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தைப் பற்றிய மற்றுமொரு அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் சில ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைப் பற்றிய கதை பற்றி இந்த திரைப்படத்தில் சொல்லப்படுகிறது என்றும் மேலும் இந்த படத்தில் சூர்யா 5 கெட்டப்களில் நடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.