தமிழ் மற்றும் தெலுகு மொழிகளில் நடித்து இன்றைய இளைஞ்சர்களின் மனதினை கொள்ளை கொண்டுள்ள ரஷ்மிகா மந்தண்ணா 5 April 1996 ல் விராஜ்பேட், கர்நாடக வில் பிறந்தவர்.

மேலும் இவரது பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை கர்நாடக மாநிலத்தில் முடித்துள்ளார்.
தனது படிப்போடு, மாடலிங் படித்த அவர் ஓரிரு விளம்பரங்களில் தோன்றினார்.
மந்தன்னா 2012 இல் மாடலிங் செய்யத் தொடங்கினார். அதே ஆண்டு க்ளீன் அண்ட் க்ளியர் ஃப்ரெஷ் ஃபேஸ் ஆஃப் இந்தியா பட்டத்தை வென்றார், மேலும் க்ளீன் அண்ட் க்ளியரின் பிராண்ட் தூதராகவும் நியமிக்கப்பட்டார்.
ரஷ்மிகா 2016 ஆம் ஆண்டில் கிரிக் கட்சி என்னும் கன்னட படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார், இது விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் பரவலான பாராட்டுகளைத் பெற்று தந்தது.
மேலும் இந்த படம் 50 கோடி ருபாய் வசூல் சாதனை புரிந்தது மட்டுமல்லாமல் 150 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த இந்த படத்தின் மொத்த செலவு 4 கோடி மட்டுமே.
மேலும் 2018 ம் ஆண்டு Chalo என்ற தெலுகு படத்தின் மூலம் தெலுகு திரை உலகிற்கு அறிமுகமானார் மற்றும் இந்த படம் 100 நாட்கள் கடந்து பல திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
இருப்பினும் இவர் விஜய் தேவர்கொண்ட வுடன் இனைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் மூலம் தெலுகு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களின் மனதிலும் நீங்க இடம் ஒன்றை பிடித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அதன் பிறகு டியர் காம்ரேடு என்ற தெலுகு படம் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்க பட்டது. அந்த படம் எதிர் பார்த்த அளவு வெற்றியடையவில்லை என்றாலும் இன்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த கொரோன காலகட்டத்தில் திரைஉலகினர் பலரும் வீட்டில் இருந்த படி தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்களது ரசிகர்களை உற்சாகப்படுத்திக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ரஷ்மிக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அது விரலாக பரவியுள்ளது. அதில் அவர் என செய்கிறார் என்று நீங்களே பாருங்கள்.