Ka Pae Ranasingam Tamil Movie Free Download and Review

Ka Pae Ranasingam

க/பெ ரணசிங்கம் – Ka Pae Ranasingam

 

இதுவரை Ka Pae Ranasingam படத்தினை பார்க்கத்தவர்களுக்கு ஒரு சிறிய முன்னோட்டம். 
இராமநாதபுரம் மாவட்டத்தினுள், தனது பரம்பரைத் தொழிலான ‘நீரோட்டம்’ பார்த்து சொல்லும் தொழிலைச் செய்துவருபவராகவும், தன் கிராமத்தின் தண்ணீர்த் தேவைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் போராளியாகவும் வலம் வருகிறார் நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
 

 

ஐஸ்வர்யா ராஜேஷை  மணம் முடித்த பிறகு தான், தன்னுடைய குடும்பத்திற்கென்று அவர் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதை உணர்கிறார்.
புதிய வீடு கட்டவும், தன் குடும்பத்தார் வசதியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தினாலும் பணம் சம்பாதிக்க துபாய் செல்கிறார் விஜய் சேதுபதி.
இந்நிலையில் திடீரென்று, துபாயில் நடந்த ஒரு கலவரத்தில் விஜய் சேதுபதி இறந்துவிட்டதாக ஐஸ்வர்யாவுக்கு செய்தி வருகிறது. செய்தி கேட்டு ஒட்டு மொத்த கிராம மக்களுமே கதறி அழுகிறார்கள்.
தன் கணவனுடைய உடம்பை துபாயில் இருந்து தன்னுடைய கிராமத்திற்கு கொண்டு வர வேண்டி, சம்மந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து மனு ஒன்றை கொடுத்து போராடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்..ஆனால் அவை ஏதும்  பலனளிக்கவில்லை.
 
இந்நிலையில் பத்து மாதங்களாக அரசு அதிகாரிகளிடம் போராடியும் பயனற்றுப் போனதால், நம் நாட்டின் பிரதாமரையே சந்திக்கக் கூடிய சூழ்நிலை ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
 
பிரதமர் அவர்கள் தலையிட்டு பேசிய பிறகு தான், துபாயில் இருந்து இறந்த தனது கணவரின் உடம்பை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

 

 

 

 

உடம்பை எரியூட்டு தஹன மேடையில் காணும் போது அதிர்ச்சியடைந்து அந்த இடத்தினை விட்டு ஆக்ரோஷமாக வீட்டுக்குச் சென்று தனது கணவனின் படத்தின் முன்பு அமர்ந்து கொண்டு அழுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
உடம்பை பார்த்த பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் அதிர்ச்சி அடைந்தார், ஏன் தனது கணவர் விஜய் சேதுபதியின் படத்தின் முன்பு அமர்ந்து கொண்டு கதறி அழுதார் என்பது படத்தைப் பார்த்தால் தான் புரியும். படத்தின் அணைத்து கதையினையும் கூறிவிட்டாள் படத்தினுடைய சுவாரசியம் குறைந்து விடும் என்பதால் முழுமையாக கூறாமல் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
என்னை பொறுத்தவரையில் க/பெ ரணசிங்கம் திரைப்படம் எனக்கு எப்படி இருக்கிறது என்றால்… முன்னரே சொன்னது போல், ரணசிங்கம் திரைப்படம் மிகவும் ரணம் தரக் கூடிய படமாகவே உள்ளது என்பது படம் பார்த்த பிறகு உங்களுக்கும் தெரியும்.
ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு எப்போதும் போல் மிகவும் இயல்பாக எதார்த்தமாக இருந்தது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியை விட ஐஸ்வர்யா ராஜேஷின் கதாப்பாத்திரமே எல்லோராலும் பேசப்படும் அளவிற்கு உள்ளது.
 
உண்மை சம்பங்களின் அடிப்படையில் இப்படத்தை இயக்குனர் விருமாண்டி அவர்கள் உருவாக்கியுள்ளார். இதுவரை யாரும் தொட்டு பாத்திடாத, பேசாத புதிய கதைக்களமாக இருப்பதால் இந்தப் படம் ஒரு சிறப்பான படமாகவே எனக்குத் தெரிகிறது.

 

 க/பெ ரணசிங்கம் திரைப்படம் ரணமாக இருக்கிறது. 

 

 
Production: ‎KJR Studios 
Cast: Aishwarya Rajesh | Bhavani Sre | Vijay Sethupathi 

 

Direction: P Virumandi 

 

Screenplay: P Virumandi 

 

Music: Ghibran 

 

Distribution: Zee Studios 

 

 

 

 

 

Loading

Spread the love

Related posts