Laabam (லாபம்) Tamil Movie Free Download and Review

laabam

லாபம்

பெருவயல் என்ற கிராமத்தில் விவசாய நிலங்களை விவசாயிகளிடம் இருந்து அபகரித்து, அந்த கிராம மக்களை அடிமையாக்கி வைத்து இருக்கிறார் வில்லன் ஜெகபதி பாபு. சில பல வருடங்களுக்கு பிறகு பெருவயல் கிராமத்திற்கு வருகின்ற விஜய் சேதுபதி, ஜெகபதி பாவுவை எதிர்த்து விவசாய சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறார்.

இதனால் கோபமடைந்த ஜெகபதி பாபு, விஜய் சேதுபதியை கொல்ல நினைக்கிறார். அதே நேரம் விஜய் சேதுபதி கிராம மக்களை ஒன்று திரட்டி கூட்டு பண்ணை என்ற திட்டத்தை செயல்படுத்தவும் நினைக்கிறார். இறுதியில் ஜெகபதி பாபு, விஜய் சேதுபதியை அழித்தாரா? இல்லையா ? விஜய் சேதுபதி பல வருடங்கள் கழித்து ஊருக்கு வருவதற்கான காரணம் என்ன? கூட்டு பண்ணை என்ற திட்டம் நிறைவேறியதா? இல்லையா ? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.

laabam
laabam

நாயகனாக நடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, விவசாய சங்க தலைவராக வலம் வருகின்றார். விவசாயத்தின் நன்மை, மற்றும் விவசாயிகள் பணம் சம்பாதிப்பது பற்றி படம் முழுக்க பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் மிகவும் அதிகமாக பேசுவது போல் தோன்றுகிறது.

நடனக் கலைஞராக வருகின்ற ஸ்ருதி ஹாசன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். விஜய் சேதுபதியை காதலிப்பது, மற்றும் அவருக்கு உதவுவது என நடிப்பில் அனைவரையும் கவர்ந்து உள்ளார். இதில் காமெடியை தான் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஜெகபதி பாபு எப்பொழுதும் போல வழக்கமான வில்லனாக வந்து செல்கிறார். நடிகர் விஜய் சேதுபதியின் நண்பர்களாக வரும் கலையரசன், டேனி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பல பேர் கொடுத்த வேலையை செய்து உள்ளார்கள்.

laabam
laabam

விவசாயத்தை மையமாக வைத்து இந்த படத்தினை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்கள். விலை நிலங்கள், விவசாயத்தின் நன்மை, விவசாயிகளின் நிலைமை, மற்றும் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் எப்படி இந்த கார்ப்பரேட் கம்பெனிகளால் சுரண்டப்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்லி உள்ளார். ஆனால், சொன்ன விதம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த படத்திலும் விவசாயம், கார்ப்பரேட் மற்றும் அரசியல் பற்றி பேசி இருப்பதால், பழைய படங்களின் தாக்கம் வெகுவாக ஆங்காங்கே வந்து செல்கிறது. டி இமான் இசையில் இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓரளவிற்கு கைகொடுத்து உள்ளது. ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம் சேர்த்து இருக்கிறது.

மொத்தத்தில் ‘லாபம்’ அதிக லாபம் இல்லை.

 Laabam (2021) Tamil Proper HQ Full Movie Download

Spread the love

Related posts