MAARA Tamil Movie Free Download and Review

MAARA

MAARA – மாறா

 

நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பார்வதி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த  மலையாள படமான சார்லியின் ரீமேக் தான் மாறா. இந்த படத்தில் பார்வதி / பாரு(ஷ்ரத்தா ஸ்ரீநாத்) தான் சிறுமியாக இருந்தபோது கேட்ட கதையினை கேரளாவில் இருக்கும் மீனவ கிராமத்தின் சுவர்களில் ஓவியமாக பார்க்கிறார். வேலை விஷயத்தின் காரணமாக அந்த ஊருக்கு சென்ற இடத்தில் சுவர்களில் ஓவியங்களை பார்த்து வியக்கும் பாரு அதை வரைந்த மாறாவை தேடுகிறார்.

மற்றவர்களை விட வித்தியாசமான ஓவியரான மாறா பலரது வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறார். மலையாள படமான சார்லி படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் சில மாற்றங்களை செய்துள்ளதும் ரசிக்கும்படி தான் உள்ளது. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு திரையில் வண்ணங்களை அழகாக தூக்கி காட்டியுள்ளது. ஜிப்ரானின் இசை படத்திற்கு மேலும் பலமாக அமைந்துள்ளது.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன் கதாபாத்திரமாகவே மாறியுள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்று கூறலாம். மாறாவின் ஓவியங்களை பாரு பார்க்கும்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மிகவும் அருமை. குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் தங்களின் வேலையை உணர்ந்து மிகவும் நன்றாக நடித்துள்ளார்கள்.

துல்கர் சல்மானின் சார்லியை பார்த்து அசந்து போனவர்கள் கூட மாறாவை விரும்பும் வகையில் தான் படத்தினை எடுத்திருக்கிறார் இயக்குனர் திலீப் குமார். சார்லியின் கதாபாத்திரம் போன்று அல்லாமல் மாறா ஏன் அப்படியானார் என்பதற்கான விளக்கத்தினை அளிக்க முயன்றுள்ளனர்.

மாறா ஜாலியாக ஊர் சுற்றி திரியும் ஆளாக இல்லாமல் மாறா மனதிற்குள்வருத்தமாக இருக்கிறார் ஆனால் சார்லியிடம் எந்த வருத்தமும் இருக்காது. துல்கர் சல்மானை விட மூத்தவரான மாதவன் அந்த கதைக்களத்தில் நடித்ததனாலோ என்னவோ இப்படி ஒரு மாற்றம் தேவைப்பட்டிருக்கிறது போலும். ஆனால் வயதில் மூத்தவராக இருந்தாலும் கூட துல்கருக்கு இணையாக சார்மிங்காக உள்ளார் நம் மேடி (A) மாதவன்.

பாரு, மாறா இடையேயான ரொமான்ஸ் பெருவாரியான ரசிகர்களிடையே ரசிக்கும்படியாக இருக்கிறது. ஆனால் கதை டிராக் மாறிப் போகும் போது பாரு மற்றும் மாறா ரொமான்ஸ் ஓரம் தள்ளப்படுகிறது. அதனால் ஆரம்பத்தில் கிடைக்கும் அந்த சந்தோஷ உணவர்வு இறுதிவரை நிலைத்திருக்கவில்லை.

Production: Pramod Films
Cast: Abirami, Gurusomasundaram, Kishore, Madhavan, Moulee, Shraddha Srinath, Sshivada Direction: Dhilip Kumar
Music: Ghibran
Cinematography: Dinesh Krishnan, Karthik Muthukumar
Editing: Bhuvan Srinivasan
Distribution: Amazon Prime Video

Loading

Spread the love

Related posts