Contents
MANDELA
யோகி பாபு நடிப்பில் வெளிவந்துள்ள அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ள திரைப்படம் தான் மண்டேலா. சங்கிலி முருகன், ஷீலா ராஜ்குமார், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேரடியாக இப்படம் விஜய் டிவியில் கடந்த ஞாயிறன்று ரிலீஸ் ஆனது. மேலும் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகியுள்ளது.
சூரங்குடி என்கிற கிராமம் வடக்கூர் மாற்றும் தெக்கூர் என இரண்டு சாதிகளாக பிரிந்து கிடக்கிறது. அந்த ஊரில் பிரசிடெண்ட் எலக்ஷன் நடைபெற, அவ்வூர் மக்களால் ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கின்ற மண்டேலா (எ) ஸ்மைல் (யோகிபாபு), யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறுகிறார். மண்டேலாவின் ஒற்றை ஓட்டுக்காக என்னவெல்லாம் நடக்கிறது..? இறுதியில் வெற்றி பெற்றது யார்.? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.