வனிதா விஜயகுமார் கொச்சையாக பேசினார் – உண்மையை வெளிப்படுத்திய நகுல்!

வனிதா

வனிதா விஜயகுமார் – சர்ச்சைகளுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் நடந்துக்கொள்ளும் நடிகை வனிதா விஜயகுமார் அதன் மூலம் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்ட வனிதா அதன் பிறகு பீட்டர் பாலுடன் திருமண சர்ச்சையில் சிக்கினார்.

வனிதா
வனிதா

அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நடன சோவான பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஜோடியாக நடனமாடிக்கொண்டிருந்த வனிதா அவர்கள் ரம்யா கிருஷ்ணன் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்தே வெளியேறிவிட்டார்.

இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ள நடிகர் நகுல், ” வனிதாவிடம் இன்னும் நன்றாக ஆடி இருக்கலாம் என்று தான் நாங்கள் கூறினோம். ஆனால் வனிதா அவர்கள் தான் வேறு விதமாக பேசினார். நான்கு நிமிட பாடலில் அவர் இரண்டு நிமிடங்களுக்கு சும்மா தான் அமர்ந்துகொண்டு இருந்தார், எனவே அவர் ஆட தொடங்கும் போது அதிகம் எனர்ஜியோடு அம்மன் போல ஆடுவார் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்தது போல அவர் ஆடவில்லை. மற்றவர்களை ஒப்பிடும்போது அவரது டான்ஸ் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று கூறினோம்.

Vanitha
Vanitha

போட்டி என்றல் ஒப்பிடாமல் எப்படி சொல்ல முடியும்? “நான் வீட்டுக்கு போன பிறகு வனிதா விஜயகுமார் அசிங்கமாக பேசினார் என டீமில் இருந்தவர்கள் கூறினார்கள். என்னை விடுங்கள், ரம்யா கிருஷ்ணனுக்கு எவ்ளோ பெயர் இருக்கிறது. அவரிடம் மன்னிப்பு கேட்டே ஆகணும்”. வனிதாவை பற்றி பேசவே நான் விரும்பவில்லை, சேற்றில் குதித்து என்னை நான் அசிங்கப்படுத்திக்கொள்ள விருப்பமில்லை” என நகுல் கூறி உள்ளார்.

Spread the love

Related posts