’’வலிமை’’ பட பாடலை எழுதியது நயன்தாராவின் காதலர் விக்னேஷ்!!

வலிமை படத்தில் தற்பொழுது வெளியாகியுள்ள ஒரு பாடலை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இப்பாடல் தான் இன்றிரவு வெளியாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வலிமை

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் மற்றும் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து வரும் படம் தான் வலிமை. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த சூழ்நிலையில் சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இந்த வலிமை படம் வரும் ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி தற்பொழுது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதனை கொண்டாட தல ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கிடக்கிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது வலிமை பட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில், படத்தின் முதல் சிங்கில் ட்ராக் பாடலுக்கு ரெடியாகுங்கள் என ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அவரது தனது டுவிட்டை இந்த படத்தின் இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் விக்னேஷ் சிவனை டேக் செய்துள்ளார், அதனால் இப்பாடலை விக்னேஷ் எழுதியிருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

அதேபோல் நடிகர் அஜித்குமார் அவர்கள் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆகியுள்ளது எனவே இதையொட்டியும் அவர் #30YearsOfAjithKumar என்ற ஹேஸ்டேக் பதிவிட்டுள்ளார் அது தற்பொழுது ட்விட்டர் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதையொட்டி இன்று வலிமை படத்தின் பாடல் ரிலீஸாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

Loading

Spread the love

Related posts