PAAVA KADHAIGAL TAMIL MOVIE FREE DOWNLOAD AND REVIEW

PAAVA KADHAIGAL

 பாவக்கதைகள்

PAAVA KADHAIGAL TAMIL MOVIE REVIEW

ஆன்லைன் ஓ.டி.டி தலமான நெட்ஃப்லிக்ஸ் ல் நேரடியாக வெளியாகியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் தான் ‘பாவக்கதைகள்’. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்கள். சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருந்தது. இப்போது படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

நான்கு வெவ்வேறு கதைகள் தளங்கள். அதன்மூலம் ‘பெண்கள் என்பவர்கள் மானமும் மற்றும் கௌரவமும் காக்கும் பொருளாக, ஓர் உடலாக, எப்படி நடத்தப்பட்டுக்கொண்டுள்ளனர் என்பதை சமூகத்தின் வெவ்வேறு நிலையில் நிலவும் உண்மையுடன் பேசியுள்ளது’ இந்த பாவக்கதைகள். பெண் தண்மையுடன் உள்ள ஆண் முதல் வேற்று சாதிப் பையனை காதலித்த பெண் வரை, ஏன் இவர்களை இந்த சமூகமானது எப்பொழுதும் விரட்டிக்கொண்டு உள்ளது என்பதை பற்றி கேள்வி எழுப்பிய முயற்சியாகவே ஒரு பெரிய பாராட்டுக்கள்.

முதலில் சுதா கொங்கரா இயக்கியுள்ள தங்கம். எப்போதுமே கேலியும் கிண்டலும் செய்யப்படும் திருநங்கை குணம் கொண்ட சத்தாருக்கு (காளிதாஸ் ஜெயராம்) 6 வயதில் இருந்தே தனது நண்பனான தங்கம் (ஷாந்தனு பாக்யராஜ்) மீது பெரும் பிரியம் கொண்டவராக உள்ளார். ஆனால், தங்கம் அவரது தங்கை (பவானி) மீது காதல் வளர்த்துக்கொண்டிருக்க, சமூகமெனும் மிருகம் அவர்களுக்கு என்ன செய்தது? அவர்கள் கொடுத்த பதில் என்ன? என்பது தான் மீதிக்கதை.

மிகவும் கனம் பொருந்திய கதைக் களத்தை எடுத்து கொண்டு, அதில் வித்தியாசமும் காட்டி தனது ஃபிலிம் மேக்கிங்கால் பெரும் வெற்றி பெறுகிறார் இயக்குனர் சுதா கொங்கரா. சத்தார் கதாபாத்திரத்தில் காளிதாஸ் தனது நடிப்பில் மிகவும் தேர்ச்சி காட்டி சலாம் போட வைக்கிறார். ஷாந்தனு பவானி ஶ்ரீ உள்ளிட்டோரின் நடிப்பும் மிகவும் பக்கா என்று தான் சொல்ல வேண்டும்.

லவ் பண்ணா விட்டுரனும்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகை கல்கி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையில், சாதி, கௌரவம், ஆணவம் என்றெல்லாம் கூறுவதையே Next-Gen இளைஞர்களின் பார்வையில் Just Like That-ஆக ஏறி மிதித்து செல்கிறது இந்த லவ் பண்ணா வுட்றனும்.

இந்த வலிமையான கதை களத்திலும் மிகவும் அட்டகாசமான நகைச்சுவையால் அமர்களம் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். நிச்சயம் இப்படி சரவெடியான ஒரு திரைப்படத்தை எதிர்ப்பார்க்கலாம் போல.!!

நடிகை அஞ்சலி க்ளாமரும் மற்றும் அடக்கமும் கலந்து காட்ட, மழலை கொஞ்சும் தமிழால் அப்லாஸ் அள்ளுகிறார் கல்கி. நரிக்குட்டியாக நடித்திருப்பவரும் தனது பங்கினை நகைச்சுவையில் மிரட்டல் காட்டி கவனிக்க வைக்கிறார். அனிருத் இசையும் இந்த கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வான்மகள். மிகபெரும் கனவுகளை சுமந்து திரியும் நடுத்தர குடும்பத்தில், அதன் கடைக்குட்டி மகள் மிக கொடுந்துயரத்தை கண்ட பின்பு அதனை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்..? சமூகத்தின் பார்வை குறித்த அவர்களின் நிலை என்னவாகிறது..? என்பதை தனது பாணியிலே சொல்லி இருக்கிறார் ஜி.வி.எம். அவரே அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வாரணம் ஆயிரத்தையும் மேலும் நியாபகப்படுத்துகிறார்.

தனது நடிப்பினால் இந்த பகுதிக்கு மேலும் கணம் கூறியுள்ளார் சிம்ரன். தனது மகளை நினைத்து கலங்கும் போது பார்வையாளர்களான நம்மையும் கரையச் செய்கிறார். 96 ல் நடித்த ஆதித்ய பாஸ்கரும் நடிப்பில் தனது திறன் காட்டியுள்ளார் , அதை சரியாகவும் செய்திருக்கிறார்.
கடைசியாக இயக்குனர் வெற்றிமாறனின் ஓர் இரவு. வேறு சாதிப் பையனை காதலித்து மணம் முடித்து கொள்கிறார் மகள் (சாய் பல்லவி). தனது மகள் இப்போது கர்ப்பமாக இருக்க, வளைகாப்புக்காக தனது பிறந்த வீட்டிற்கு அழைத்து வருகிறார் அப்பா (பிரகாஷ் ராஜ்). ஆனால், இந்த சமூகம் கட்டி எழுப்பியிருக்கிற கௌரவமும் மானமும் அவரை எப்படி நடந்து கொள்ள வைக்கிறது என்பதை ஆழமாக நமக்கு காட்சி படுத்தியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

 அரைமணி நேரம் கிடைத்திருந்தாலும் கூட, காட்சி மொழியில் எப்படி அதன் அடர்த்தியை கூட்ட முடியும் என்பதை மேலும் நிருபித்து, மீண்டும் மீண்டும் வெற்றி பெறுகிறார் நம் இயக்குனர் வெற்றிமாறன்.

சாதியின் இருக்கத்தினை வெள்ளை வேட்டி சட்டையுடன் சுமந்து திரிந்துள்ள பிரகாஷ் ராஜ் மிகக் கச்சிதம். கண்களில் கனவுகளையும் முகத்தில் அப்பாவித்தனத்தினையும் சுமந்து மேலும் அழகு சேர்க்கிறார் சாய் பல்லவி. க்ளைமாக்ஸ் காட்சியில் அப்பா பிரகாஷ் ராஜ் மற்றும் மகள் சாய் பல்லவியின் நடிப்பு க்ளாசிக் பந்தயம் அடித்துள்ளது.

கதைக்களங்களில் மட்டுமில்லாமல் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை என தொழிநுட்பத்திலும் நேர்த்தி காட்டியிருக்கிறது இக்கதைகளின் படக்குழு. அதற்கு நிச்சயம் நம் பாராட்டுக்கள்.

 

Production: RSVP Movies

 

Cast: Anjali, Bhavani Sre, Gautham Menon, Kalidas Jayaram, Kalki Koechlin, Prakash Raj, Sai Pallavi, Shanthanu Baghyaraj, Simran

 

Direction: Gautham Menon, Sudha Kongara, Vetrimaaran, Vignesh Shivan

 

Screenplay: Gautham Menon, Sudha Kongara, Vetrimaaran, Vignesh Shivan

 

Spread the love

Related posts