Sarpatta Parambarai Tamil New Movies Free Download and Review

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை – K9 Studios மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப், சஞ்சனா நடராஜன், அனுபமா குமார் மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் எழுதி இயக்கியுள்ள படம் தான் இந்த சார்பட்டா பரம்பரை.

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை

கருப்பர் நகர குத்துச்சண்டை போட்டிகள் மற்றும் வாத்தியார் மரபு முதலான வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது இந்த படம். புகழ் பெட்ரா குத்துசண்டை வீரர் முகமது அலிக்கு அஞ்சலி செலுத்தி தொடங்குகிறது. பிரிட்டிஷ் காலத்தில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’யின் தற்போதைய வாத்தியார் தான் பசுபதி. தங்கள் பரம்பரையிடம் மோதி ஜெயிக்க நினைக்கும் இடியாப்ப பரம்பரையை வீழ்த்த சரியான பாக்ஸர் இன்றி தவிக்கிறார் பசுபதி.

பரம்பரை கௌரவத்தை காப்பாற்ற இளம் வீரர்கள் பிரதாப், தன் மகன் கலையரசன் என்று யார் யாரையோ களமிறக்கி பார்க்கிறார் வாத்தியார் பசுபதி. ஆனால் பசுபதியின் ஒவ்வொரு பாக்ஸிங் விளையாட்டையும் மிகவும் நுணுக்கமாக கவனித்து வரும் ஆர்யாவை பார்த்து பசுபதி வியக்கிறார். தனக்குள் இருக்கும் பாக்ஸரை வெளிக்கொண்டு வர ஆர்யாவே களமிறங்குகிறார். ஆர்யாவின் தாயார் அனுபமா, இதை விரும்பாமல் கண்டிக்க, தனது தந்தை இறந்தது போல் ஆர்யாவின் வாழ்க்கையும் நாசமாகி விடும் என பயந்து, முதலில் தடுக்க பார்க்கிறார்.

ஆனால் அவர் பயந்தது போலவே தவறான பாதையில் ஆர்யா செல்கிறார். பின்னர் ஆர்யா திருந்துவதுடன் தன் வாத்தியார் பசுபதி, தன் தந்தையின் நண்பன் ஜான் விஜய், மனைவி துஷாரா விஜயன், அம்மா அனுபமா, கலையரசன் என பலரின் உறுதுணையோடு சார்பட்டா பரம்பரை கௌரவத்தை நிலைநிறுத்தி ஜெயித்தாரா இல்லையா என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.

உடலை மிகவும் கட்டுமஸ்தாக மாற்றி ஆச்சரியப்பட வைக்கிறார் ஆர்யா. நம் லவ்வர் பாய் ஆர்யா இந்த படத்தில் ரொமான்ஸ் குறைவாகவே செய்திருந்தாலும் அதனை நிறைவாகவே செய்திருக்கிறார்.கோபம், அழுகை, ஆற்றாமை, வெறி என பல உணர்வுகளை உள்வாங்கி நடித்திருந்தார். திமுக துண்டை தோளில் போட்டுக் கொண்டு கம்பீரம், நிதானம், அரசியல், வரலாறு, பாக்ஸிங் என வாத்தியார் ரங்கனாக நடிகர் பசுபதி மீசையை முறுக்கலாம்.

முக்கிய கதாபாத்திரத்தை சுமந்திருக்கிறார் நடிகர் கலையரசன். அவ்வப்போது ஆங்கிலம்; ஆர்யாவை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பது என காமெடியும் எமோஷனலும் கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தை நிறைவு செய்கிறார் நடிகர் ஜான் விஜய். அம்மாவாக அனுபமா குமார், ஆர்யாவின் மனைவியாக துஷாரா விஜயன், கலையரசன் மனைவியாக சஞ்சனா நடராஜன் என இந்த படத்தில் வரும் பெண்கள் எதார்த்தத்தை அருமையாக நிறுவுகின்றனர்.

எழுபதுகளில் நடந்த குத்துச்சண்டை மரபையும், அரசியல் சூழலையும் நம் கண் முன் கொண்டு வருவதற்காக, ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம், ஒளிப்பதிவாளர் ஜி.முரளி அனைவரும் தங்களின் உழைப்பை சரியாக கொடுத்துள்ளனர். நடன மாஸ்டர் சாண்டி மிகவும் கலக்கியுள்ளார். அன்பறிவ் கொடுத்த சண்டைப்பயிற்சியும், தியாகராஜனின் பாக்ஸிங் பயிற்சியும் படத்தின் இன்னொரு பலம். சந்தோஷின் பாடல்கள் பெரிதாக மனதில் பதியவில்லை என்றாலும் கூட கதைசொல்லியாகவே மாறி படத்துக்கு உதவுகின்றன. பின்னணி இசை வேற லெவல் செய்துள்ளார்.

இது பா.ரஞ்சித்தின் வழக்கத்துக்கு மாறான ஸ்போர்ட்ஸ் படம் என்றும் கூறலாம். திமுக ஆட்சி, ஆட்சிமாற்றம், எமர்ஜென்சி என சமகால அரசியல் சூழலானது சரியான இடங்களில் பொருத்தப்பட்டு கதையில் பிரதிபலிக்கிறது. ஆனந்த் பட்டவர்த்தனின் ஆவணப்படத்தை அழகாக பயன்படுத்தி உள்ளார் இயக்குனர்.

“மானத்தை ஏண்டா பரம்பரையில் கொண்டுவந்து வைக்கிறீங்க” என துஷாரா பேசும் ஒரு வசனம் போதும்; வசனகர்த்தா தமிழ்ப் பிரபாவுக்கு குவிகிறது பாராட்டுக்கள். கலைஞர் – எம்ஜிஆர் புகைப்படங்கள், திமுக துண்டு, அம்பேத்கர் போஸ்டர், பெரியார் ஃபோட்டோ, புத்தர் சிலை, நீலம் கருப்பு கலந்த பாக்ஸர் அங்கி என குறியீடுகள் சொல்லும் கதைகள் தனி.

கடைசியில் கலையரசன் தனது தவறை உணர்வதை அனைவராலும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கலையரசன் ஆர்யாவை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டதாக துஷாரா, ஜான் விஜய், பசுபதி என்று பலரும் பல விதத்தில் சொல்லியும் கூட, கடைசிவரை ஆர்யா அதை உணர்ந்ததாக காட்டப்படவே இல்லை.

பாக்ஸிங் ஆர்வத்தில் வேலையை விட்டுவிட்டு, பின்னர் ஜெயிலுக்கெல்லாம் ஆர்யா போகும்போது, வீட்டில் உள்ள அவரது கர்ப்பிணி மனைவியான துஷாரா அந்த வறுமையிலும் எந்த வருமானத்தை வைத்து குடும்பம் நடத்துகிறார்‌.? கடைசி 45 நிமிடம் யூகிக்க முடிந்த கதைதான், இதை நீட்டி முழக்க எதற்கு 2 மணி நேரம் 53 நிமிடம்? என்று கேள்விகள் நம் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும் பெரும்பாலான நேரம் என்கேஜிங்கான திரைக்கதையுடன் நகர்கிறது இந்த சார்பட்டா பரம்பரை!

 

சார்பட்டா பரம்பரை Free Download

Also Read: Methagu Full Movie Free Download and Review

Loading

Spread the love

Related posts