75 கோடிக்கு மேல் கடன் பிரச்னை… சிக்கி தவிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் – சமயம் பார்த்து வலை விரித்துள்ள சன் பிச்சர்ஸ்!
சமீபத்திய தமிழ் சினிமாவின் ஹிட் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது மிகவும் கடின உழைப்பால் இந்த இடத்திற்கு முன்னேறி வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் 24AM ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.

அதில் ரெமோ படத்தினை தவிர சீமராஜா, வேலைக்காரன் போன்ற ஒரு சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை மற்றும் இதனால் கோடி கணக்கில் கடனும் ஆகிவிட்டது. இதனை ஈடுகட்டும் வகையில் சன் பிச்சர்ஸ் நிறுவனத்தில் தொடர்ந்து 5 படங்களில் நடிக்க 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரு படத்திற்கு 15 கோடி சம்பளம் என்று பேசி மொத்தம் 75 கோடி என்று ஒப்பந்தம் செய்துள்ளாராம். அது மொத்தமும் கடன் கொடுத்தாலும் அடையாது என்கிறது கோலிவுட் வட்டார கிசுகிசுக்கள்.
இது தான் சமயம் என்று இதுவரை ஒரு படத்திற்கே 22 கோடி ருபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனை 15 கோடி ரூபாய்க்கு பேரம் பேசி வலையில் சிக்க வைத்துள்ளது சன் பிச்சரின் வியாபார டெக்னிக் தான் இதில் ஹைலைட் ஆகும்.