Teddy
டெடியை அனைவரும் மிக எளிமையாக கடந்துபோவதும், சர்வதேச அளவிலான வில்லன்களை டெடி மிக ஈஸியாக அட்டாக் செய்வதும், எம்பஸி அதிகாரிகளை சுலபமாக சுத்தலில் விட்டு கோமாளிகளாக்குவதும் நம்ப முடியாததாக உள்ளது.
இந்தியாவில் டெடி எந்த சிசிடிவியிலும் கண்டுபிடிக்கப் படாதது முதல், ஆர்யா வெளிநாட்டுக்கு சென்று அங்கு சயீஷாவை கண்டுபிடிப்பது வரை படத்தில் பல லாஜிக் சறுக்கல்கள் உள்ளன. யூகிக்கக் கூடிய முடிவுதான் என்பதால் இரண்டாம் பாதியின் நீளத்தையாவது குறைத்திருக்கலாம் என்பது பெரும்பாலானோரின் கருத்து. கடைசி 10 நிமிட காதல் காட்சிகளில் கூட கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் படத்தின் இயக்குனர்.!
Spread the love