The Suicide Squad Full Movie Free Download and Review

சூசைட் ஸ்குவாட்

The Suicide Squad – ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ படங்களில், பெரும்பாலும் ஹீரோவுக்கு சமமான வில்லன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். குறிப்பாக சொல்லப்போனால், ஹீரோக்களைவிட வில்லனுக்கே ரசிகர்கள் பட்டாளம் அதிகம் காணப்படும். பேட்மேன், ஃபிளாஷ் போன்ற சூப்பர் ஹீரோக்களை ஹீரோக்களைவிட, சூப்பர் வில்லன்களான ஜோக்கர் மற்றும் டெட் ஷாட் போன்றவர்களுக்கே இங்கு மவுசு ஜாஸ்தி.

சூசைட் ஸ்குவாட்
சூசைட் ஸ்குவாட்

பேட்மேன் சீரியஸில் சூப்பர் வில்லன்களை சிறைக்குள் தள்ளிவிடுவார் நம் பேட்மேன். இந்த சூப்பர்வில்லன்களுக்கும் மற்றும் அல்ட்ரா சூப்பர் வில்லன்களுக்கும் இடையே ஏற்படும் சண்டை தான் இந்த சூசைட் ஸ்குவாட்.

இந்த படத்தில் சூப்பர் வில்லன்கள் தான் ஹீரோஸ்! வில்லனுக்கும் வில்லனுக்கும் சண்டை வந்தால் எப்படி இருக்கும் என்ற ஒன்லைனுடன் ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளது இந்த சூசைட் ஸ்குவாட் படம். டெட்ஷாட் (வில் ஸ்மித்), ஹார்லி குயின் (மார்கட் ராபி ), கேப்டன் பூமரேங் (கர்ட்னி ), எல் டியாப்லோ (ஜெய் ஹெர்னாண்டஸ்), கில்லர் க்ரொக் (அடிவாலே) இவர்கள் எல்லோரும் உலகிலேயே மிகவும் மோசமானவர்கள் என்பதால் பலத்த பாதுகாப்புடன் சிறையில் இருக்கின்றனர்.

அரசாங்கமே இவர்களுக்கு ஒரு அசைன்மென்ட் தருகிறது. அவர்கள் இந்த அசைன்மென்டை செய்யத் தவறும் பட்சத்தில், இவர்களின் கழுத்துப் பகுதியில் இருக்கும் சிப் ஆக்டிவேட்டாகி, வெடித்து இறந்துவிடுவார்கள் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றனர். இந்த உலகத்தையே அழிக்கவரும் அல்ட்ரா வில்லன்களை, இந்த சூப்பர்வில்லன்கள் வென்றார்களா இல்லையா என்பதே இந்த சூசைட் ஸ்குவாட் படத்தின் மீதி கதை. சின்ன கான்செப்டுடன் காமெடி சரவெடியால் ரசிகர்களை ஈர்க்கிறது இந்த திரைப்படம்.

படத்தில் வரும் ஒவ்வொரு சூப்பர் வில்லன்களுக்கும் ஒரு குட்டி இன்ட்ரோ தரும் போதே, அதை கேக்கும் அரங்கம் அதிர்கிறது. இன்ட்ரோ குடுக்கும் காட்சிகளில் சூப்பர் வில்லன்களைப் பிடித்து சிறையில் அடைக்கும் சூப்பர் ஹீரோக்களாக பேட்மேனும், தி ஃப்ளாஷும் வருகிறார்கள். அட, ஒரே படத்தில் எத்தனை சூப்பர் ஹீரோக்கள் என கை தட்டிக்கொண்டே பார்க்க வைக்கிறது இந்த சூசைட் ஸ்குவாட் திரைப்படம்.

இந்த உலகத்தை அழிக்க வேறு ஒரு உலகத்திலிருந்துவரும் வில்லன்களை, அமெரிக்காவின் சூப்பர் ஹீரோஸ் அழித்து இந்த உலகையே காப்பாற்றுவது தான் பாரம்பரியமாக நடந்து வரும் வழக்கம். இதை கொஞ்சம் அப்படியே நகர்த்திவைத்துவிட்டு, ஹீரோக்களுக்கு பதிலாக வில்லன்களை ஹீரோக்களாக்கி ரசிகர்களிடம் வெற்றியும் கண்டுவிட்டது டி.சி (Detective Comics). கான்செப்ட மாத்தினீங்க சரி, அப்படியே கதையையும் கொஞ்சம் மாத்துங்க ஜி… ப்ளீஸ்!

ஹார்லி குயினின் காதலராக வரும் ஜோக்கர்! வாவ்! ஹார்லி குயின் கதாபாத்திரத்தில் மார்கட் ராபி கலக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அவரின் வசனங்கள் எல்லாமே மிகவும் ரசிக்கும் படி உள்ளது. படத்தில் எப்போதெல்லாம் வேகமும் விறுவிறுப்பும் குறைகிறதோ, அப்போதெல்லாம் ஜோக்கர்- ஹார்லி குயின் காட்சிகள் வந்து படத்தைக் காப்பாற்றுகிறது. குறிப்பாக, ஜோக்கருடன் காதல் காட்சிகளில் சைக்கோத்தனமாகவும் ரொமான்ஸில் மிரட்டுகிறார் ஹார்லி. ஜோக்கருக்குனே தனியா ஒரு படம் எடுங்க இயக்குநர் சார் என்று கூறும்படி ரசிக்க வைக்கிறது!

மேலும் லாஜிக், கதை நகர்வு என எதுவுமே இல்லாததால், நெட்டிசன்களால் இணையத்தில் அதிகம் கழுவி ஊற்றப்படுகிறது இந்த சூசைட் ஸ்குவாட். ஆனால், அதையெல்லாம் நாங்கள் எதிர்பார்த்து வரவில்லை என்பது போல், கைதட்டுகிறார்கள் காமிக்ஸ் ரசிகர்கள். முதல் மூன்று நாட்களில் 267 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலாக பாக்ஸ் ஆஃபிசில் கலெக்‌ஷன் குவித்து உள்ளது இந்த The Suicide Squad.

Full Movie Download Here

Loading

Spread the love

Related posts