வனிதா விஜயகுமார்க்கு மீண்டும் திருமணமா ?

Vanitha VIjaykumar

நடிகை வனிதா விஜயகுமாருக்கு இதுவரை 3 முறை திருமணம் நடந்துள்ளது. ஆகாஷ், ஆனந்தராஜன், பீட்டர் பால் என்று மூன்று பேரை முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு பிறகு குறிப்பிட்ட காலங்கள் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்துள்ளார்.

Vanitha Vijaykumar
Vanitha Vijaykumar

வனிதா திருமணம் செய்துகொள்வதும் பின்னர் விவாகரத்து செய்து வருவதும் தீபாவளி, பொங்கல் போல ஆகிவிட்டது. வருடத்திற்கு ஒருவர் என இவரது கணவர்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. அந்தவகையில் தற்போது நேற்றைய முன்தினம் காமெடிய நடிகரான பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

திருமண கோலத்தில் இருந்த வனிதா மற்றும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ஸ் பலரும் 4வது திருமணம் ஆகிடுச்சா…? சிக்குனாண்டா சேகர் என பவர் ஸ்டாரை ஒட்டு ஓட்டுன்னு ஒட்டித்தள்ளியுள்ளனர் நம் நெட்டிசன்கள். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வர தற்பொழுது இந்த புகைப்படத்தை வைத்து இருவரும் கன்னத்தோடு கன்னம் உரசுவதுபோல் எடிட் செய்த புகைப்படமொன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது. இதனை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பார்த்து நக்கலாக சிரித்து கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related posts